நீலகிரி,உதகை, ஏப்ரல் 1 -- 'அரசியல் கட்சிக்கு கொள்கை தான் முக்கியம், கொள்கையே இல்லாத கட்சி அதிமுக. கையில் கயிறு கட்டி, நெற்றியில் பொட்டு வைத்தால், யார் சங்கி? யார் நாம்? என தெரியாது' என திமுக எம்.பி., ஆ.ராசா பேசியது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க | 'டாஸ்மாக் ரெய்டு ஏன்? என்ன கிடைத்தது?' அமலாக்கத்துறை தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் விளக்கம்!

நீலகிரி மாவட்டம் உதகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தனியார் விடுதி ஒன்றில், மாநில மாணவரணி சார்பில் திமுகவில் உள்ள 72 மாவட்ட மாணவரணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் பங்கேற்ற கருத்தரங்கு நடைபெற்றது. மாநில மாணவரணி செயலாளர் ராஜீவ் காந்தி தலைமையில் நடந்த இந்த கருத்தரங்கில், திமுக துணைப் பொதுச் செயலாளரும், எம்.பி.,யுமான ஆ.இராசா மற்றும் செய்தி மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மு....