இந்தியா, ஏப்ரல் 19 -- டென் ஹவர்ஸ் திரைப்படம் ஏப்ரல் 18ஆம் தேதி வெளியாகியிருக்கிறது. இப்படத்தில் சிபி சத்யராஜ் ஹீரோவாக நடித்து இருக்கிறார். இப்படத்தை இளையாராஜா கலியபெருமாள் இயக்கி இருக்கிறார். இப்படம் தொடர்பாக, ஏப்ரல் 18ஆம் தேதி ஆதன் சினிமா யூடியூப் சேனலில் சிபி சத்யராஜ் கொடுத்த வீடியோ நேர்காணல் வெளியாகியிருக்கிறது. அதன் தொகுப்பினைக் காணலாம்.

இயக்குநர் கதை சொல்லும்போது, ரொம்ப கன்வின்சிங் ஆக இருந்தது. மேலும், பவுண்டட் ஸ்கிரிப்ட் வாங்கி படிச்சேன். பஸ்ஸில் நடக்கும் க்ரைம் என்பது புதிதாக இருந்தது. அதைச்சுற்றி நடக்கும் விசாரணை, ஒரு க்ரைமோட இன்டர்லிங்காக இன்னொரு லிங்க் அப்படிங்கிறது புது ஃபேக்டராக இருந்தது. நிறையப் படங்கள் போலீஸாக பண்ணியதால், போலீஸ் கதாபாத்திரமே வேண்டாம் பிரேக் விடலாம்ன்னு நினைச்சேன். ஸ்கிரிப்ட் கேட்கும்போது நல்லாயிருந்துச்சு. ...