Chennai, ஏப்ரல் 26 -- நடிகர் மற்றும் இயக்குநர் சமுத்திரக்கனியின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் நடிகராகவும், தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் இயக்குநராகவும் பணிபுரிந்த சமுத்திரக்கனி குறித்து அறிந்துகொள்ள நம்மிடம் ஏராளமான விஷயங்கள் உள்ளன. வாருங்கள் பார்ப்போம்.

யார் இந்த சமுத்திரக்கனி?: 1973ஆம் ஆண்டு, ஏப்ரல் 26ஆம் தேதி, தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தில் ராஜபாளையம் அருகேயுள்ள சேத்தூரில் பிறந்தவர், சமுத்திரக்கனி. அதன்பின் ராஜபாளையத்தில் உள்ள ராஜூஸ் கல்லூரியில் இளங்கலை கணிதவியல் பிரிவில் பட்டம் பெற்றார். பின், அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் சட்டம்பயின்றார், சமுத்திரக்கனி. அடிப்படையில் வழக்கறிஞரான சமுத்திரக்கனி, நடிகராக வேண்டும் என்று ஆசைப்பட்டார். அதனால், திரைத்துறையில் 1997ஆம் ஆண்டு, சுந்தர் கே...