ஈரோடு,சென்னை,கோவை,திருப்பூர், பிப்ரவரி 12 -- ''எத்தனையோ வாய்ப்புகள் என்னை தேடி வந்தன. அதை தவிர்த்து விட்டு கழகத்தின் ஒற்றுமைக்காக பாடுபட்டவன் நான், என்னை சோதிக்க வேண்டாம்,' என, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேசியுள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த நல்ல கவுண்டம்பாளையத்தில் முன்னாள் முதல்வரும் அதிமுக நிறுவனருமான எம்.ஜி.ஆர்.,யின் 108 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையின் பேசியதாவது:

''தடுக்கி விழுந்தால் தமிழ்நாட்டில், யார் எந்த ஊரில் உள்ளார்கள் என எனக்கு தெரியும். எம்.ஜி.ஆர்.,க்கு வந்த சோதனைகள் யாருக்கும் வந்திருக்காது. எதிர்கட்சி தலைவர்(எடப்பாடி ப...