இந்தியா, ஏப்ரல் 20 -- மகளிர் உரிமை தொகை குறித்து கேள்வி எழுப்பிய பெண்ணுக்கு மிரட்டம் தொனியில் பதிலளித்தாக திமுக பேச்சாளர் தமிழன் பிரசன்னாவுக்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக தனது 'எக்ஸ்' வலைத்தளத்தில் தமிழன் பிரசன்னாவின் வீடியோவை பதிவிட்டு, கருத்து பதிவிட்டு உள்ளார். அதில், எளிய மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், ஏற்றத் தாழ்வற்ற சமூகத்தை உருவாக்கவும் இலவசங்கள், உரிமைத்தொகை போன்ற திட்டங்கள் உருவாக்கப்படுகின்றன. ஆனால், திமுக மட்டும் எப்போதுமே மக்களைக் கொச்சைப்படுத்தும் விதமாக அதை சுட்டிக்காட்டி அரசியலை செய்கிறார்கள். அதே சமயம், கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளின் படி எந்த திட்டங்களையும் செயல்படுத்தாத கட்சியாகவும் திமுக உள்ளது. இந்த நான்கு ஆண்டு காலம் மக்கள் விரோத ஆட்சியை நடத்தி வரும் திமுகவ...