இந்தியா, மார்ச் 28 -- சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடிகர் மோகன்லால் மம்முட்டிக்காக ஐயப்பன் கோயிலில் பிரசாத காணிக்கை செலுத்தியது சில இந்துக்களாலும் இஸ்லாமியர்களாலும் விமர்சிக்கப்பட்டது. குறிப்பாக, இந்து அல்லாதோரின் பெயருக்கு எப்படி அர்ச்சனை செய்யலாம் என்று சிலரும், இஸ்லாமியருக்கு ஏக இறைவன் அல்லா மட்டுமே என்று சிலர் பேசியது சர்ச்சையைக் கிளப்பியது.

இந்நிலையில் சர்ச்சை அறிக்கைகளுக்கு கேரள சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் வி.அப்துர் ரஹ்மான் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்.

நடிகர் மோகன் லால் நடிப்பது குறித்து குறுகிய மனப்பான்மை கொண்ட, நாகரீகமற்ற கருத்துகளை தெரிவித்தவர்கள் பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கேரள சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் அப்துர்ரஹிமான் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''கேரளம் உயர்...