இந்தியா, ஜூன் 24 -- ஷங்கர் மற்றும் ராம் சரணின் கூட்டணியில் வெளியான அரசியல் அதிரடி த்ரில்லர் படமான கேம் சேஞ்சர் இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாகும். இருப்பினும், இந்தத்திரைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கத்தவறியது. இதனால் படத்தின் இயக்குநர் ஷங்கர் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளானார்.

இதற்கிடையே அந்தப்படத்தின் எடிட்டர் ஷமீர் முகமது, ஷங்கருடன் இணைந்து பணியாற்றும் போது ஏற்பட்ட சிக்கல்கள் குறித்து வெளிப்படையாக பேசி இருந்தார். இந்த நிலையில் தற்போது படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ எம் 9 நியூஸுக்கு அளித்த பேட்டியில் கேம் சேஞ்சர் படம் தயாரித்த போது உருவான சிக்கல்கள் குறித்து பேசி இருக்கிறார்.

அவர் பேசும் போது, 'பெரிய இயக்குநர்களை வைத்து பெரிய படங்களை எடுக்கும்போது, எனக்கு மட்டுமல்ல, கிட்டத்தட்ட அனைவருக்கும் 100% பிரச்சின...