இந்தியா, மே 14 -- நடிகர் ரவி மோகன் மற்றும் அவரது தோழியும் பாடகியுமான கெனிஷா பிரான்சிஸ் இணைந்து சமீபத்தில் சென்னையில் நடந்த தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகளின் திருமணத்தில் கலந்து கொண்டனர். அவர்கள் இருவரும் தங்க ஜரிகையால் செய்யப்பட்ட உடையில் திருமண நிகழ்வில் பங்கேற்றனர்.

மேலும் படிக்க| ஓடிடி பக்கம் திசையை திருப்பவுள்ள டூரிஸ்ட் ஃபேமிலி.. தியேட்டரைப் போல ஓடிடியிலும் ஹிட் அடிக்குமா?

ஏற்கனவே, நடிகர் ரவி மோகன் அவரது மனைவி ஆர்த்தியை பிரிய கெனிஷா தான் காரணம் என கூறப்பட்டு வரும் நிலையில் அவர்கள் இருவரும் பொது நிகழ்ச்சியில் பங்கேற்றது பேசுபொருளானது. இதையடுத்து, பலரும் ரவி மோகன் மற்றும் அவரது மனைவி, கெனிஷா என மூன்று பேரையும் குறிப்பிட்டு பல்வேறு வகையான வதந்திகளை பரப்பி வந்தனர்.

இதனால் பொறுமை இழந்த ரவி மோகனின் மனைவி ஆர்த்தி பரபரப்பான அறிக்கை ஒன்றை வெ...