இந்தியா, மார்ச் 23 -- தமிழ்நாட்டில் கூலிப்படை கொலைகள் அதிகரித்துவிட்டதாக காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்து உள்ளார்.

எந்தெந்த மேடையில் எதை பேச வேண்டும் என்பது உள்ளது. தொகுதி மறுசீரமைப்பு பற்றி ஒரு மித்த கருத்து வர வேண்டும் என்பதற்காக சில மாநிலங்களை கூட்டி இருக்கிறோம். ஒரு மாநிலத்திற்கும் மற்றொரு மாநிலத்திற்கும் உள்ள தனிப்பட்ட பிரச்னையை தீர்க்க வேறு அமைப்பு உள்ளது. காவிரி பிரச்னை என்றால் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உள்ளது. முல்லை பெரியாறு அணை பிரச்னையை விவாதிக்க தனி அமைப்பு உள்ளது. பஞ்சாப், ஒரிசா, தெலங்கானா, ஆந்திராவில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்களை கூட்டி வந்து இந்த பிரச்னையை பேசக் கூடாது. இதை பேசுவதால் என்பதால், நீ ஏன் இதை பேசவில்லை என பேசுவது ஏற்க முடியாதது.

நமது அரசியல் அமைப்பில் நீதிபதிகளை நியமிப்பது, அவர்களின் நடத்தையை ...