சென்னை,சேலம்,திருநெல்வேலி, ஏப்ரல் 18 -- தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

''பாசத்துக்குரிய பாரதிய ஜனதா கட்சியின் என் அருமைத் தாமரை சொந்தங்களே. உங்கள் அனைவரின் ஒத்துழைப்புடன், நம் கட்சியின் மூத்த தலைவர்களின் வழிகாட்டுதலுடன், நம் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன், தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் திமுகவின் மக்கள் விரோத ஆட்சியை வீழ்த்தி மக்களுக்கு நல்லாட்சியும் வளர்ச்சியும் கிடைக்கச்செய்ய வேண்டிய மிக முக்கியமான கடமையும் பொறுப்பும் நம் பாரதிய ஜனதா கட்சிக்கு இருக்கிறது.

மேலும் படிக்க | ஈபிஎஸ் குறித்து அவதூறு பேச்சு! திராவிட ஆதரவாளர் ஸ்ரீவித்யாவுக்கு பறந்தது நோட்டீஸ்! அதிமுக வழக்கறிஞர் அணி அதிரடி!

நம் அனைவரின் ஒற்றை இலக்கு மக்கள் விரோத திமுகவின் ஆட்சி அவலங்களை எல்லாம், வரும் தேர்தலில் முடிவ...