திருப்பூர், செப்டம்பர் 12 -- மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் எழுச்சிப்பயணத்தில் இன்று திருப்பூர் வடக்கு மற்றும் திருப்பூர் தெற்கு தொகுதிகளில் மக்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அடுத்தபடியாக பல்லடம் தொகுதிக்குட்பட்ட என்.ஜி.ஆர் சாலையில் திரண்டிருந்த பொதுமக்கள் மத்தியில் சிறப்புரை ஆற்றினார்.

"ஸ்டாலின் எல்லா கூட்டத்திலும் திமுக தான் ஆட்சிக்கு வரும் என்று பேசுகிறார். ஸ்டாலின் அவர்களே, பல்லடம் கூட்டத்தைப் பாருங்கள். அதிமுக கூட்டணி வெற்றிக்கு இம்மக்களே சாட்சி. திமுக எத்தனை கூட்டணி அமைத்தாலும் சரி, அதிமுக மக்களுடன் கூட்டணி அமைத்துள்ளோம். மக்கள் நினைத்தால் தான் ஆட்சிக்கு வரலாம். அதிமுக மக்களை நம்பி இருக்கிறது, திமுக கூட்டணியை நம்பியிருக்கிறது. தேர்தலில் திமுகவுக்கு சரியான தீர்ப்பை வழங்குவீர்கள் என்ற நம்பிக்கை என்னிடத்தி...