இந்தியா, ஏப்ரல் 24 -- கன்னியாகுமரி மக்கள் நீங்கள் படித்து தேறிவிடக் கூடியவர்கள் என பாஜக எம்.எல்.ஏ எம்.ஆர்.காந்தி கேட்ட கேள்விக்கு அமைச்சர் ரகுபதி சொன்ன பதிலால் சிரிப்பலை சட்டப்பேரவையில் பரவியது.

இதுதொடர்பாக நாகர்கோவில் தொகுதி பாஜக எம்.எல்.ஏ எம்.ஆர்.காந்தி பேசுகையில், ''மாண்புமிகு அவைத்தலைவர் அவர்களே. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு சட்டக்கல்லூரி அமைத்துத்தரும்படி, அமைச்சர் அவர்களைக் கேட்டுக்கொண்டு, கன்னியாகுமரி மாவட்டம் மிகச்சிறிய மாவட்டம். மக்கள் தொகை அதிகமான மாவட்டம். ஏறத்தாழ 20 லட்சத்துக்கும் அதிகமானோர் வாழ்கின்றனர். படித்தவர்கள் அதிகமுள்ள மாவட்டமாக கருதப்படுகிறது. தொழில்துறை இல்லாத மாவட்டம். விவசாயத்தால் வாழ்கின்ற ஏழை மாவட்டம். ஒவ்வொரு ஆண்டும் ஏறத்தாழ 21ஆயிரம் மாணவ, மாணவிகள் பிளஸ் டூ முடித்து வெளியில் வருகின்றனர்.

அவர்கள் மருத்துவம், ...