இந்தியா, ஏப்ரல் 24 -- பிரபல மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோவுக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. அவர் நடிக்கும் மலையாள திரைப்படமான 'சூத்ரவாக்கியம்' படப்பிடிப்பு தளத்தில், சக நடிகை ஒருவர், ஷைன் டாம் சாக்கோ தன்னைச் சுற்றி "பாலியல் ரீதியான அர்த்தங்கள்" கொண்ட கருத்துக்களைத் தெரிவித்ததாகவும், தகாத முறையில் நடந்துகொண்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக தற்போது ஆஸ்திரேலியாவில் இருக்கும் நடிகை அபர்ணா ஜான், ஒரு தொலைக்காட்சி சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில், சாக்கோவின் நடத்தை குறித்து அலோஷியஸ் கூறிய அனைத்தும் "100 சதவீதம் உண்மை" என்று கூறினார். "அது என்னவென்று எந்த ஆதாரத்துடனும் என்னால் விளக்கி கூற முடியாது என்பதால் வெள்ளை பவுடர் என்று மட்டுமே என்னால் சொல்ல முடியும். ஏனெனில் அது என்னவென்று உறுதியாக என்னால் கூற முடியாது. அது குளுக்கோஸாக இருக...