Chennai, ஏப்ரல் 19 -- நடிகர் சூரி நடிக்கும் 'மண்டாடி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகின. அதில் ராமநாதபுரத்து மாவட்டத்தில் நடக்கும் பாய்மரப் படகு போட்டியில் பங்கேற்கும் வீரராக நடிகர் சூரி நடித்து இருக்கிறார்.

ஜி.வி.பிரகாஷ் நடித்த செல்ஃபி என்னும் படம் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனவர், மதிமாறன் புகழேந்தி. இவர் இயக்கும் இரண்டாவது படம், 'மண்டாடி'. இப்படத்தை விடுதலை, கொட்டுக்காளி ஆகியப் படங்களில் கதையின் நாயகனாக நடித்த சூரி, முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர் ராமநாதபுரத்தில் கடற்கரையோர கிராமங்களில் நடக்கும் பாய்மரப் படகு போட்டியில் பங்கேற்கும் வீரர் முத்துக்காளியாக நடித்திருக்கிறார். அவர் அணிந்திருக்கும் ஜெர்சியின்மூலம், அவரது அணியின் பெயர், 'முகவை மைந்தன்ஸ்' எனத் தெரிகிறது. மிக முக்கியமாக தெலுங்கில் 'கலர் போட்டோ' என்ன...