பேராவூரணி,பட்டுக்கோட்டை,புதுக்கோட்டை, ஜூலை 23 -- 'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' எழுச்சிப் பயணத்தில் அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று பட்டுக்கோட்டை - புதுக்கோட்டை சாலை, தபால் நிலையம் அருகே குழுமியிருந்த மக்கள் கூட்டத்திற்கிடையில் உரையாற்றினார்.

அப்போது அவர், ''கொட்டுக்கும் மழையையும் பொருட்படுத்தாமல் பட்டுக்கோட்டை நகரமே குலுங்கும் அளவுக்கான மக்களின் எழுச்சியே நம் வெற்றிக்குச் சான்று. (அப்போது ஒருவர் மின் கம்பத்தில் நிற்பதைப் பார்த்ததும் - தயவுசெய்து மின்கம்பத்தின் மீது ஏறாதீர்கள் என்று எச்சரிக்கை செய்தார்) மழை நின்றுவிட்டது. இந்த பகுதி மக்களை சந்திக்க வேண்டும், மக்களிடம் பேச வேண்டும் என்பதற்காக வருண பகவான் வழி விட்டிருக்கிறார்.

பட்டுக்கோட்டை என்றால் அதிமுக கோட்டை. மழை நேரத்திலும...