இந்தியா, பிப்ரவரி 28 -- முன்னாள் ராணுவ வீரரை தாக்கிய காவல் ஆய்வாளர் பிரவீன் ராஜேஷ் மீது மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளிக்க உள்ளதாக சீமானின் மனைவி கயல்விழி தெரிவித்து உள்ளார்.

சென்னை நீலாங்கரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், வளசரவக்கம் போலீசார் நேற்று வீட்டுக்கு வந்து எங்களிடம் வந்து சம்மன் கொடுத்து இருக்கலாம். என்னை சந்தித்து நேரில் சந்தித்து கொடுத்து இருக்கலாம். சீமான் கிருஷ்ணகிரியில் உள்ளார் என்பது அனைவருக்கும் தெரியும். அங்கு உள்ள காவலர்களுக்கு கொடுத்தும் அவருக்கு கொடுத்து இருக்கலாம். ஆனால் அவர்களாகவே வந்து சம்மனை ஒட்டிவிட்டு சென்றுவிட்டனர்.

காவல்துறை ஒட்டிவிட்டு சென்றுவிட்டார்கள் என்றால் அதை எடுத்துவிடுங்கள் என்று வழக்கறிஞர்கள் சொன்னார்கள். யாருமே இல்லாத வீட்டில் சம்மன் ஒட்டிவிட்டு செல்வது போல் சென்று உள்ளனர். நான் வீட்டில் உள...