இந்தியா, பிப்ரவரி 25 -- கவுதம் வாசுதேவ் மேனன் பேட்டி: இயக்குநர் கவுதம் மேனன் தனது கல்லூரி கால நட்பு பற்றி மனம் திறந்து பேசியிருக்கிறார்.

இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் மதன் கவுரியின் யூடியூப் சேனலுக்கு, ஓ மை காட் ஷோ என்ற பாட்காஸ்ட்டில் ஜனவரி 12, 2025ல் பேசியிருக்கிறார். அதில் சில ஒரு குறிப்பிட்ட பகுதியின் தொகுப்பு தான் இது.

வாரணம் ஆயிரம் எழுதும்போது நாம் சுயசரிதை எடுக்கிற அளவுக்கு ஒரு நினைப்பு இருந்தாலும், சூர்யா வந்து இந்தக் கதை எல்லோரையும் தங்களுக்குள் இணைக்கும். அதனால் அதனைப் பற்றி கவலைப்பட வேண்டாம் என்று சொல்லிக்கொண்டே இருந்தார்.

எனது குடும்பப் புகைப்படத்தை வாரணம் ஆயிரத்தில் ரீ-கிரியேட் செய்தோம். வாரணம் ஆயிரம் எழுதும்போது எனது அப்பாவுக்கு கடைசிகட்ட கேன்சர் இருந்தது. என்னால் கவனித்து எழுதமுடியல. இன்னும் மூன்று வாரங்களுக்குள் கதை வே...