இந்தியா, ஏப்ரல் 3 -- மக்களவையில் நிறைவேற்றப்பட்ட வக்ஃபு சட்டத் திருத்தத்தை எதிர்த்து திமுக சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். அதே போல 110 விதிகளின் கீழ், சில அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டார்.

சட்டமன்றத்தில் 110 விதிகளின் கீழ் பேசிய முதல்வர் ஸ்டாலின், 'உலக மாமேதை காரல் மார்க்ஸ் அவர்களைப் பெருமைப்படுத்திட, போற்றிட திராவிட மாடல் அரசு விரும்புகிறது. நூறு ஆண்டுகளுக்கு முன்பே தொழிற்சங்க இயக்கம் கோலோச்சிய இந்த சென்னை மாநகரில் அந்த மாமேதையின் சிலை அமைவது பொருத்தமானது' என்று அறிவித்தார். இதன் மூலம், மார்க்சிஸ்ட் கட்சியினரை கூல் செய்ய முதல்வர் இந்த அறிவிப்பை வெளியிட்டாரா என்கிற எண்ணம் எழுந்துள்ளது. இன்று மதுரையில் நடைபெறும் மார்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டில் மு...