இந்தியா, பிப்ரவரி 26 -- காசியிலிருந்து கோவை வரை முழு பாரதமும் சிவனின் திருவருளில் திளைக்கிறது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியிருக்கிறார்.

கோவை ஈஷா யோக மையத்தில் மஹாசிவராத்திரி விழா இன்று (26/02/2025) நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "ஈஷா மஹாசிவராத்திரி விழா பக்தியின் மஹாகும்பமேளா" எனப் புகழாரம் சூட்டினார்.

இவ்விழாவில் மாண்புமிகு உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசுகையில், "சத்குருவின் அழைப்பை ஏற்று ஆதியோகி தரிசனம் பெறுவதிலும், மகாதேவரின் மகத்துவத்தை வெளிப்படுத்தும் பிரமாண்ட மஹாசிவராத்திரி விழாவில் பங்கேற்பதை பெரும் பேறாக கருதுகிறேன்.

இன்று ஆன்மிகத்தில் சோமநாத்திலிருந்து கேதார்நாத் வரை, பசுபதிநாத்திலிருந்து ராமேஸ்வரம் வரை, காசியிலிருந்து கோவை வரை முழு பாரதமும் சிவபெருமானின் திருவர...