இந்தியா, ஏப்ரல் 20 -- அமலாக்கத்துறை உள்ளிட்ட புலனாய்வு அமைப்புகளைக் காங்கிரஸ் கட்சி மீது ஒன்றிய பா.ஜ.க. அரசு ஏவி விடுவது ஜனநாயகத்தில் அருவருக்கத்தக்க அரசியல் என திமுக பொருளாளரும், மக்களவைக் குழுத் தலைவருமான திரு. டி.ஆர்.பாலு தெரிவித்து உள்ளார்.

ஒன்றிய பா.ஜ.க. அரசின் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையாக - நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான திருமதி. சோனியா காந்தி, திரு. ராகுல் காந்தி ஆகியோர் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதற்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

குஜராத்தில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில் பா.ஜ.க. அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகள் பற்றி நடைபெற்ற கருத்துருவாக்கமும் - காங்கிரஸ் தொண்டர்களின் எழுச்சியும் பா.ஜ.க.வை மிரள வைத்திர...