இந்தியா, மே 25 -- இயக்குநர் ராமின் பறந்து போ, படத்தில் இருந்து முதல் பாடல் வெளியாகி பால்ய கால காதல் உணர்வுகளைக் கிளறியிருக்கிறது.

தமிழ் சினிமாவில் எப்போதுமே தனது தனித்துவமான கதைகள் மூலம், பொதுவெளியில் உரையாடல் நிகழ்த்தக் கூடிய முக்கியமான இயக்குநர், ராம்.

குறிப்பாக, இவர் இயக்கிய கற்றது தமிழ், தங்க மீன்கள், தரமணி, பேரன்பு என நான்கு படங்களை இயக்கி தனக்கென ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர். இவரது ஒவ்வொரு படங்களிலும் உலக மயமாக்கலால் ஏற்படும் பாதிப்பின் தாக்கம் கதைகளில் பிரதிபலிக்கும். இவரது படங்கள் பல சர்வதேச திரை விழாக்களில் விருதுகளை வென்றுள்ளன.

இந்நிலையில் நடிகர் சிவா, மலையாளத்தில் பிரபலமான நடிகை க்ரேஸ் ஆண்டனி ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, அஞ்சலி, அஜு வர்கீஸ், விஜய் ஏசுதாஸ், தியா ஆகியோர் நடித்து வரும் ஜூலை 4ஆம் தேதி திரையரங்குக...