இந்தியா, மார்ச் 6 -- தனது கள்ளக்கூட்டணியை காப்பாற்ற அதிமுக இரட்டை வேடம் போடுவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமாருக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பதிலடி கொடுத்து உள்ளார்.

இது தொடர்பாக தனது எக்ஸ் சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ள இடுகையில், தொகுதி மறுசீரமைப்பின் பெயரால் தமிழ்நாட்டிற்கு ஏற்படப்போகும் பேராபத்தை உணர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் நடத்திய அனைத்துக் கட்சிகூட்டம் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. கட்சி வேறுபாடுகளைத் தாண்டி தமிழ்நாட்டின் ஒற்றுமைக்குரலை வெளிப்படுத்த வேண்டும் எனும் முனைப்போடு முதலமைச்சர் தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்தார்.

தமிழர்களுக்கு எதிரியான பாஜகவும் அதன் எடுபிடிகள் சிலரையும் தவிர அனைவரும் பங்கெடுத்து முதலமைச்சரின் முன்னெடுப்பிற்கு ஆதரவு கொடுத்துள்ளனர். அதிமுகவ...