இந்தியா, ஏப்ரல் 9 -- விஜய் டிவியின் பிரபல ரியாலிட்டி ஷோவான லொள்ளு சபா மூலம் பெயர் பெற்ற ஆண்டனி உடல்நலக் குறைவால் இன்று காலமானார். இந்தத் தகவலை ஆண்டனிக்கு கடைசி காலத்தில் பல உதவிகள் புரிந்து வந்த விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியலில் செல்வம் எனும் கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் பழனியப்பன் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: லொள்ளு சபா டூ கோலிவுட் ஸ்டார்.. சந்தானத்தின் சாதனை பாதை..

நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டு வந்த ஆண்டனி, பல நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். முன்னதாக அவர் தம்பிக்கோட்டை உள்ளிட்ட படங்களிலும் நடித்து வந்தார். அவருக்கு தேவையான உதவிகளை நடிகர் சந்தானம் உட்பட பல லொள்ளு சபா நடிகர்களும், மக்களும் செய்து வந்தனர். இதற்காக, பழனியப்பன் பல இடங்களில் உதவி கேட்டும் திரிந்துள்ளார். அத்துடன் ஆண்டனிக்கு உதவி கோரி பலமுறை வீடியோவும் வெள...