சென்னை,சேலம்,கரூர், ஏப்ரல் 7 -- இன்றைய சட்டமன்றத்தில், டாஸ்மாக் ஊழல் குறித்து கேள்வி எழுப்புவதற்காக, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், 'யார் அந்த தியாகி?' என்கிற பேட்ஜ் அணிந்து பங்கேற்றனர். அது தொடர்பான கேள்வி எழுப்ப, எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி முயன்ற போது, அதற்கு சபாநாயார் அப்பாவு அனுமதி மறுத்தார். அதன் பின் அமளியில் ஈடுபட்ட அதிமுகவினர், வெளியில் வந்து டாஸ்மாக் ஊழல் குறித்து குற்றம்சாட்டினர். இது தொடர்பாக, எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களையும் சந்தித்தார். இந்நிலையில், அதிமுகவினர் வெளியேறிய பிறகு, முதல்வர் ஸ்டாலின், சட்டமன்றத்தில் பதிலளித்தார்.

மேலும் படிக்க | ஏதே தியாகியா? துரோகி தெரியுமா? 'எடப்பாடி பழனிசாமி பாஜகவின் பண்ணை அடிமை!' விளாசும் ரகுபதி!

அந்த பதிலுக்கு பதிலடியாக எடப்பாடி பழனிசாமி, தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், ஒரு அறிக்...