சேலம்,சென்னை,கோவை, ஏப்ரல் 17 -- அதிமுகவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், தலைமை கழகம் அறுிவிப்பு என்கிற பெயரில், அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் அதிமுகவினருக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மேலும் படிக்க | பாஜக-அதிமுக கூட்டணி: 'கூட்டணி ஆட்சியா? வாய்ப்பே இல்ல!' அதிமுக எம்.பி.தம்பிதுரை திட்டவட்டம்!

''கட்சி நிர்வாகிகளுக்கும், கட்சியின் மீது பற்று கொண்டுள்ளவர்களுக்கும் அன்பு வேண்டுகோள்! கழக நிறுவனத் தலைவர் 'பொன்மனச் செம்மல்' புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர்., இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா ஆகியோர் காலந்தொட்டும்; நம் இருபெரும் தலைவர்களின் நல்லாசியோடு தொடர்ந்தும், 'அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்' ஒரு கட்டுக்கோப்பான இயக்கமாக செயல்பட்டு வருகிறது என்பதை அனைவரும் நன்கு அ...