இந்தியா, மே 10 -- கட்சிக்காரர்களுக்கு ஆடு வெட்டி பிரியாணி போடும் திமுகவினர், மக்கள் தாகம் தீர்க்க நீர்மோர் பந்தல் வைக்காதது ஏன் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பி உள்ளார்.

மதுரை மேற்கு தொகுதியில் அதிமுக சார்பாக நடத்தப்பட்ட நீர்மோர் பந்தல் மீது காவல்துறை மற்றும் ஆளுங்கட்சியினரால் விதிக்கப்பட்ட தடையை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கடுமையாகக் கண்டித்துள்ளார். மதுரை விளாங்குடி பகுதியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், இந்தச் சம்பவத்தை "தமிழ்நாட்டில் வேறு எங்கும் இல்லாத அநீதி" என்று விமர்சித்த அவர், ஆளுங்கட்சியின் அராஜகமும், காவல்துறையின் பாரபட்சமான நடவடிக்கைகளும் மக்களுக்கு எதிரானவை எனக் குற்றம்சாட்டினார்.

மேலும் படிக்க:- 'இந்தி தெரியாததால் 10,000 கோடி ரூபாய் இழந்தேன்!' ஏர்செல் நிறுவனர் சிவசங்கரன் பரபரப்பு பேட்டி! ...