மதுரை, ஏப்ரல் 4 -- மதுரையில் நடந்து வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாடு நடந்து வருகிறது. அதில் இயக்குனரும் நடிகருமான சமுத்திரகனி பங்கேற்று, பேசினார். அவர் பேசியதாவது:

''உலகத்தில் எங்கு சிவப்பு சட்டை அணிந்து வந்தாலும் ஒரு எளிய மனிதர் வருகிறார் அவரிடம் நாம் பேசலாம் என நினைக்கும் அளவிற்கு நம்பிக்கை பிறக்கும். சிறிய வயதில் இருந்து சிவப்பு என்றால் ஆசை. வெற்றிமாறனை பார்க்கும்போது எங்கோ ஒரு இடத்தில் சிவப்பு சிந்தனை வரும். ராஜூமுருகன், லெனின்பாரதி என எங்க துறையில் சிவப்பு சிந்தனையோடு வரும் திரைப்பட இயக்குனர்களை பார்க்கும்போது அவர்களுக்கு தனி முத்திரையெல்லாம் கிடையாது, மகிழ்ச்சியாக இருக்கும்

முதலாளித்துவ வர்க்கத்தை ஒழிப்பதும், சமூகத்தில் உள்ள ஏற்ற தாழ்வுகளை சமமாக்குவதும் கம்யூனிஸ தத்துவம் தான். பொதுவுடமைவாதி காற்று, மழை போல இரு...