விழுப்புரம்,விக்கிரவாண்டி, ஜூலை 10 -- விழுப்புரம், விக்கிரவாண்டிய உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிகளில் இன்று 'மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்' பிரசார பயணம் செய்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, விழுப்புரத்தில் பேசியதாவது:

''நானும் கிராமத்தில் இருந்து வந்தவன், யாரும் கோரிக்கை வைக்கவில்லை, ஓய்வுபெற்ற நீதிபதி மூலம் ஆய்வுசெய்து, நானே முடிவுசெய்து 7.5 சதவிகித உள் ஒதுக்கீடு கொண்டுவந்தேன். ஏழைகளையும் மருத்துவராக்கியது அதிமுக அரசு.

சி.வி.சண்முகம் தலைமையில் ஆர்பாட்டம் அறிவிப்பு

மத்திய அரசு 2030ல் அடைய வேண்டிய உயர்கல்வி இலக்கை, அதிமுக ஆட்சியிலேயே அடைந்துவிட்டோம். முதுநிலைப் பட்டப் படிப்பு 5 கோடியில் கட்டடம் கட்டிக் கொடுத்தோம். இன்னும் இங்கு அட்மிஷனே போடலை, வரும் 14ம் தேதி வரை காலக்கெடு விதிக்கிறோம். இல்லையென்றால் சி.வி.சண்முகம் தலைமையி...