இந்தியா, ஏப்ரல் 2 -- தமிழ்நாட்டின் அரசியல் மட்டும் இல்லாது இந்திய அரசியலிலும் அடிக்கடி ஒலிக்க கூடிய ஒரு பிரச்சனை தான் கச்சத்தீவு விவகாரம். இது தொடர்பாக பல கட்சிகள் அவர்களது நிலைப்பாட்டையும், குற்றச்சாட்டுக்களை வைப்பது வழக்கம். இந்த வகையில் இன்று நடந்த தமிழ்நாடு சட்டப்பேரவையில் இது தொடர்பாக மத்திய அரசை வலியுறுத்த தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கச்சத்தீவை மீட்டால் மட்டுமே இலங்கை அரசால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க முடியும் என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார். இன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பாக செய்தியாளர்களிடம் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேட்டியளித்துள்ளார். அதில் அடுத்த ஆண்டு வரும் தேர்தல் காரணமாக தான் திமுக அரசு இந்த கச்சத்தீவு தீர்மான நாடகத்தை போட்டுள்ளது என கடுமையாக சாடியுள்ளார்.

"ஏன் இத்தனை கால...