தூத்துக்குடி,சென்னை,சேலம், மார்ச் 27 -- ''ஓபிஎஸ், பிரிந்தது.. பிரிந்தது தான். இனி சேர்வதற்கு சாத்தியம் கிடையாது. கட்சியை எப்போது எதிரிகளிடம், அடமானம் வைத்தாரோ, கட்சியின் தலைமை கழகத்தை, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோயிலை என்று அவர் உடைத்தாரோ, அவருக்கு அந்த கட்சியில் இருப்பதற்கு தகுதி இல்லை,'' என்று எடப்பாடி பழனிசாமி தூத்துக்குடி விமான நிலையத்தில் பேட்டியளித்துள்ளார்.

மேலும் படிக்க | 'இந்தியாவின் இரும்பு மனிதர் அமித்ஷா!' அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் புகழாரம்!

தென்காசி, பாளையங்கோட்டை தொகுதிகளின் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.கருப்பசாமி பாண்டியன் நேற்று உடல்நலக் குறைவால் காலமானார். இவரின் உடல் இன்று திருநெல்வேலியில் இன்று அடக்கம் செய்யப்பட்டது. ஆகவே, கருப்பசாமி பாண்டியன் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக எதிர்க்கட்சித் தலைவர்...