இந்தியா, மே 26 -- ஒரே நாடு ஒரே தேர்தலை எதிர்ப்பவர்கள் கருணாநிதியின் நெஞ்சுக்கு நீதி நூலை படிக்க வேண்டும் என ஆந்திர மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாண் தெரிவித்து உள்ளார்.

சென்னையில் நடைபெற்ற ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான கருத்தரங்கில், ஆந்திர துணை முதலமைச்சரும், ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யாண் கலந்து கொண்டு பேசினார். அதில் தமிழகத்துடனான தனது ஆழமான பிணைப்பைப் பற்றிக் குறிப்பிட்ட அவர், இந்தத் திட்டம் குறித்த தனது பார்வையை ஒரு கருத்தரங்கில் முன்வைத்தார்.

மேலும் படிக்க:- 'பாஜகவிடம் நெடுஞ்சாண்கிடையாகத் தி.மு.க. சரணாகதி அடைந்துவிட்டது' மு.க.ஸ்டாலினை சாடும் விஜய்!

'ஒரே நாடு ஒரே தேர்தல்' என்பது புதிய அல்லது பரிசோதனை செய்யப்படாத கோட்பாடு அல்ல என்று பவன் கல்யாண் கூறினார். இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, 1950 முதல் 1967 வரை சுமார் இரண்டு தசாப...