இந்தியா, ஏப்ரல் 1 -- சின்ன கவுண்டர், வால்டர் வெற்றிவேல், சின்ன ஜமீன், வண்டிச்சோலை சின்ராசு போன்ற பல படங்களில் ஹீரோயினாக நடித்தவர், நடிகை சுகன்யா. அவர் மிஸ் வாவ் தமிழா யூடியூப் சேனலுக்கு 2024ஆம் ஆண்டு, மே 24ல் அளித்த பேட்டியின் தொகுப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அவை:-

நிறைய சினிமா ஆஃபர்கள் வந்திட்டே இருந்துச்சு. ரொம்ப கிளியரா நான் சொல்லிட்டே இருந்தேன். ஏனென்றால்,நான் டான்ஸ் அடிப்படையில் தான் போகணும்னு நினைச்சேன். ஆமா, நான் காலேஜ் எல்லாம்முடிச்சிட்டு, டான்ஸில் தான் கவனம் செலுத்தினேன். அடுத்து நடிக்க ஆஃபர்கள் பற்றி அப்பா, அம்மா இரண்டுபேர்கிட்டேயும் டிஸ்கஸ் செய்யும்போது நிறைய தப்புத்தப்பாக தான் எழுதுவாங்க. நீ உன் வேலையை குதிரைக்கு கடிவாளம்போட்டமாதிரி சரியாக செய்திட்டே என்றால் யாரும் தவறாகப் பேசமுடியாதுன்னு சொன்னாங்க. குறிப்பாக, சினிமாவில் இர...