இந்தியா, மார்ச் 10 -- 'ஒரு நாள் தொப்பி போட்டுக் கொண்டு வேடம் போடுபவன் நான் அல்ல' என விஜயின் இஃப்தார் விருந்து குறித்த கேள்விக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பதில் அளித்து உள்ளார்.

கோவை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், புதிய கல்விக் கொள்கையை நாம் எதிர்க்கிறோமா?, ஏற்கிறோமா என்பதில் நாம் ஒரு தெளிவான முடிவு எடுக்க வேண்டும். இல்லாம் தேடி கல்வியை நாம் ஏற்று உள்ளோம். தமிழ்நாடு அரசு புதிய கல்விக் கொள்கையை அப்படியே ஏற்பதாக கூறி ஜவஹர் நேசன் வெளியேறி இருந்தார். நமது குழந்தைகளுக்கு எழுதி வைக்கும் மரண சாசனம் என கல்வி ஆய்வாளர்கள், அறிஞர்கள் சொல்கின்றனர். விரும்பிய கல்வியை கற்பது நமது நாட்டில் மிகப்பெரிய சவாலாக உள்ளது.

ஒரு பண்பாட்டு நிகழ்வில் பங்கேற்கிறேன். இதில் ...