இந்தியா, பிப்ரவரி 22 -- நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நடைபெறும் ஊழல் முறைகேடுகளை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விவசாயிகள் அரும்பாடுபட்டு விளைவித்த நெல்மணிகளைக் கொள்முதல் செய்வதற்காக தமிழ்நாடு அரசால் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நடைபெறும் ஊழல் முறைகேடுகளால் வேளாண் பெருங்குடி மக்கள் செய்வதறியாது தவித்து வருவது மிகுந்த மனவேதனை அளிக்கிறது.

இரத்தத்தை வியர்வையாகச் சிந்தி, வெயிலிலும் மழையிலும் தங்கள் கடின உழைப்பினால் விளைவித்த நெல்மணிகளுக்கு உரிய விலை வேண்டி விவசாயிகள் காலங்காலமாகப் போராடி வருகின்றனர். குறைந்தபட்ச கொள்முதல் விலையாகக் குவிண்டால் ஒன்றுக்கு 3000 ரூபாய் நி...