இந்தியா, பிப்ரவரி 26 -- நடிகை திரிஷாவின் பேட்டி: 'ஒருவரைப் பற்றி புறம்பேசுவது அழகான விஷயம் கிடையாது' என்றும்; திருமணம் ரத்து ஆனது குறித்த நடிகை திரிஷாவின் பேட்டி வைரல் ஆகியுள்ளது.

நடிகை திரிஷா ஐ-டிரீம் ஊடகத்துக்கு 2016ஆம் ஆண்டு நவம்பர் 18-ல் அளித்த பேட்டி வைரல் ஆகியுள்ளது. அதன் தொகுப்பினைக் காணலாம்.

அது உண்மைதான். சினிமாவில் இருப்பது எனக்கு ரொம்ப கடினமானதாகவும் இருக்கிறது. ஒரு குடும்பத்தில் இருந்து வந்து நான் சினிமாவில் நடிகையாக ஜெயித்துவிட்டேன்.

எனது குடும்பத்தில் என்னைப் பொத்திப் பொத்தி பார்த்துக் கொள்வார்கள். ஏனென்றால், நான் ஒரே ஒரு குழந்தை என்பதனால். நான் யாரையும் பயன்படுத்தவில்லை. நான் யாருக்கும் துரோகம் செய்யவில்லை.

இன்றைக்குக் கூட, எனக்கு யாராவது துரோகம் செய்துவிட்டாலோ, என்னிடம் பொய் சொல்லிவிட்டாலோ எனக்கு கோபம் தான் வரும். அந்த...