இந்தியா, பிப்ரவரி 27 -- ஒருநாள் போனை பார்க்கமாட்டேன் என Phone Fasting இருங்க என்றும், அவ்வளவு சந்தோஷமாக இருப்பீங்க என்றும் நடிகர் சமுத்திரக்கனி பேசியிருக்கிறார்.

கள்ளக்குறிச்சியில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதப்போகும் மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் இயக்குநர் மற்றும் நடிகர் சமுத்திரக்கனி கலந்துகொண்டார்.

அப்போது நம்பிக்கையளிக்கும் விதமாக பேசிய இயக்குநர் மற்றும் நடிகர் சமுத்திரக்கனி, '' நான் பள்ளிக்கூடத்துக்கு போன நினைவு வந்திருச்சு. வெள்ளை சட்டை, ப்ளூ டவுசர் போட்டுட்டுப் போனேன். 12ஆவது டவுசர் தான் கொடுத்தாங்கே. என்னுடைய ஆசிரியர் நினைவுக்கு வருகிறார்கள். ஆசிரியர்கள் தான், இரண்டாம் தாய் தந்தையர். என்னை வளர்த்தது எல்லாம் ஆசிரியர்கள் தான். முதன்முதலாக பள்ளிக்கூடத்துக்குப் போகும்போது கையையும் காலையும் கட்டி, தூக்கிட்டுப் போவாங்...