இந்தியா, மார்ச் 11 -- புகையிலை தொடர்பான விளம்பரங்களை ஐ.பி.எல் அமைப்பு தடை செய்ய வேண்டும் என எங்களின் கருத்தை மத்திய அரசும் வலியுறுத்தியிருப்பது பாமகவின் முயற்சிகளுக்கு கிடைத்த வெற்றி என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் ஐ.பிஎல் போட்டிகளின்போது விளையாட்டு அரங்குகளிலும், தொலைக்காட்சி ஒளிபரப்புகளின்போதும் மது, புகையிலை தொடர்பான விளம்பரங்களை அனுமதிக்கக் கூடாது என்று ஐ.பி.எல் நிர்வாகத்திற்கு மத்திய அரசு ஆணையிட்டுள்ளது வரவேற்கத்தக்கது என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் எக்ஸ் தளப் பதிவில், ''இந்தியாவில் வரும் 22-ஆம் தேதி தொடங்கவுள்ள ஐ.பி.எல் போட்டிகளின்போது விளையாட்டு அரங்குகளிலும், தொலைக்காட்சி ஒளிபரப்புகளின்போதும் மது மற்றும் புகையிலை தொடர்பான விளம்பரங்களைக் கூட அனுமதிக்கக் கூடா...