இந்தியா, மார்ச் 7 -- தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ திடலில் நடைபெற்றது.

அதில் த.வெ.க சார்பில் நோன்பு கஞ்சியும், 2 ஆயிரம் நபர்களுக்காக மட்டன் பிரியாணியும் தயார் செய்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து ஒய்.எம்.சி.ஏ திடலுக்கு பிரசார வாகனம் மூலம் விஜய் வந்தார். குறிப்பாக, இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்கு வெள்ளை கைலி, வெள்ளை சட்டை, தொப்பியுடன் விஜய் வருகை தந்தார்.

அதன்பின் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அந்நிகழ்வில் பேசிய நடிகர் விஜய், ''என் நெஞ்சில் குடியிருக்கும் எனது அன்பான இஸ்லாமிய பெருமக்கள் உங்கள் அனைவருக்கும் வணக்கம்;

மாமனிதர் நபிகள் நாயகம் அவர்களின் வாழ்க்கையை பின்பற்றி மனிதநேயத்தையும் சகோதரத்துவத்தையும் பின்பற்றுகிற இங...