தேனி,மதுரை,பெரியகுளம், மார்ச் 2 -- 'உங்களை விட நான் சீனியர்..' தேனி பொதுகூட்டத்தில் ஓபிஎஸ்-யை வெளுத்து வாங்கிய எடப்பாடி பழனிச்சாமி. அதிமுக முன்னாள் பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக சார்பில் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மதுராபுரியில் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்றார். மேலும் முன்னாள் அதிமுக அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ, விஜயபாஸ்கர் மற்றும் பாரதிய பார்வேர்டு பிளாக் கட்சி தலைவர் முருகன்ஜி உள்பட அதிமுகவினர் ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர். இக்கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது:

''பொதுக்கூட்டம் பார்ப்பதற்கு மாநாடு போல உள்ளது இதை ப...