இந்தியா, ஜூலை 15 -- பா.ரஞ்சித்தின் வேட்டுவம் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் ஸ்டண்ட் மேன் எஸ்.எம்.ராஜு மரணம் அடைந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த மரணம் தொடர்பாக இயக்குநர் உள்பட 3 பேர் மீது கீழையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த துயர சம்பவம் குறித்து தனது குழு சார்பாக ரஞ்சித் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார்.

அந்த அறிக்கையில் அவர், 'ஜூலை 13 ஆம் தேதி காலை, தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் எங்கள் வேட்டுவம்" படப்பிடிப்பு தளத்தில் திறமையான சண்டைக் கலைஞரும், நீண்டகால சக ஊழியருமான மோகன் ராஜை எதிர்பாராத விதமாக இழந்தோம்.

இந்த சம்பவத்தால் அவரது மனைவி, குழந்தைகள், குடும்பத்தினர் மற்றும் மோகன் ராஜ் அண்ணாவை ஒரு சக ஊழியராகவும், நண்பராகவும் அறிந்த மற்றும் நேசித்த அனைவருக்கும் இதயம் நொறுங்கி போய் இருக்...