இந்தியா, ஏப்ரல் 29 -- காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவத்திற்கு நாடு முழுவதும் கண்டனங்கள் வலுத்து வரும் நிலையில், நேற்று டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற விழாவில் பத்மபூஷன் விருதை பெற்றுக்கொண்ட அஜித்குமாரும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து இருக்கிறார்.

மேலும் படிக்க | மிடுக்கான நடை.. மனமார்ந்த புன்னகை.. பத்ம பூஷண் விருதினை கைகளில் ஏந்தினார் அஜித் குமார்..

இது குறித்து ஏ.என்.ஐ நிறுவனத்திற்கு பேசிய அஜித்குமார், 'என்னுடைய இரங்கலை உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தெரிவித்துக்கொள்கிறேன். வரும் காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடக்காது என்று நம்புகிறேன். அதற்காக பிரார்த்திக்கிறேன். இந்தத்தாக்குதலுக்கு மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன். வேற்றுமைகளை ஒதுக்கிவ...