இந்தியா, மார்ச் 11 -- தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளரான ரவிவர்மன் அண்மையில் உலகின் முன்னணி ஒளிப்பதிவாளர் அமைப்பான அமெரிக்க ஒளிப்பதிவாளர் சங்கத்தின் (ASC) உறுப்பினராக சேர்க்கப்பட்டார். இதன் மூலம் பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனுக்கு பின்னர், அமெரிக்க ஒளிப்பதிவாளர் சங்கத்தின் உறுப்பினர் ஆகும் இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

இவர் அண்மையில் பெங்களூர் திரைப்பட விழாவில் கலந்து கொண்டார். அங்கு அவர் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அவர் பேசும் போது, 'முன்பெல்லாம் கதையை வைத்து அதற்கான ஹீரோ, இயக்குநர் யார் என்பதை தயாரிப்பாளரே முடிவு செய்யும் ஸ்டுடியோ அமைப்பு இருந்தது.

ஆனால், இன்று இந்தியா துரதிர்ஷ்டவசமாக ஸ்டுடியோ அமைப்பை இழந்துவிட்டது. இப்போது, கதை, தயாரிப்பாளர் மற்றும் இயக்குநரை தீர்மானிக்கும் அதிகாரம் ஹீரோவிடம் சென்று விட்...