இந்தியா, ஜூலை 1 -- ராஷ்மிகா மந்தனா மற்றும் ரன்பீர் கபூர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து, சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் வெளியான திரைப்படம் அனிமல். இந்தப்படத்தில் ரன்பீர் ஏற்று நடித்திருந்த கதாபாத்திரம் ஆணாதிக்க மனநிலை கொண்டதாக இருந்ததாக விமர்சனங்கள் எழுந்தன.

ஆனால், அதையெல்லாம் அனிமல் திரைப்படம் முறியடித்து பாக்ஸ் ஆஃபிஸில் மிகப்பெரிய வெற்றிப்பெற்றது. இந்த நிலையில் அண்மையில் ராஷ்மிகா கொடுத்த பேட்டி ஒன்றில், அவர் படம் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.

அவர் பேசும் போது, "நான் படத்தை ஒரு படமாக பார்த்தேன். ஒரு ஹீரோ திரையில் சிகரெட் பிடிக்கும் போது அவர் படம் பார்ப்பவர்களையும் புகைக்கத்தூண்டுகிறார் என்று சொல்வார்கள். ஆனால், இன்றைக்கு புகை பிடிப்பது சமூகத்தில் சர்வ சாதாரணமாகிவிட்டது.

நான் எந்த வகையிலும் ப...