விருதுநகர்,மதுரை,ராமநாதபுரம்,அருப்புக்கோட்டை, மார்ச் 11 -- விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வட்டம் கோவிலாங்குளம் மண்டல வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தை சீர்குலைக்க முயற்சி நடப்பதாக காவிரி வைகை கிருதுமால் குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக காவிரி வைகை கிருதுமால் குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் எம்.அர்ச்சுணன், தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

''பாரத ரத்னா புரட்சித் தலைவர் டாக்டர் எம். ஜி. ஆர் அவர்கள் 1977 ல் அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்று தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் ஆனார். அவர்கள் தென் மாவட்ட மக்களின் நலன் கருதி கொண்டு வந்த திட்டம் தான் கோவிலாங்குளம் மண்டல வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் ஆகும்.

மேலும் படிக்க | 'மேட்டூர் அனல்...