இந்தியா, மார்ச் 6 -- அன்னபூரணி அரசு ரோஹித் அம்மாவின் கணவரும், முன்னாள் சேவகருமான ரோஹித், அன்னபூரணியின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் ஒரு இடுகையை வெளியிட்டுள்ளார். அதில் தன் மனைவி மீதான விமர்சனங்களுக்கு தனது விளக்கத்தை அவர் தெரிவித்துள்ளார்.

''என் மனைவியை பற்றி பேசுவதற்கு இங்கு யாருக்கும் தகுதி கிடையாது. தானும் சத்தியத்தின் பாதையில் சென்று கொண்டு அவர்களின் பக்தர்களையும் சத்தியத்தின் பாதையில் அழைத்துச் சென்று கொண்டு இருக்கிறார். சத்தியத்தின் பாதையில் பயணிப்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. அந்த பாதையில் சென்று சத்தியத்தை நிலை நாட்டுவதற்கு என் மனைவி கடந்து செல்லும் சூழ்நிலைகளையும் சோதனைகளையும் ஒரே ஒரு நாள் என் மனைவியை பற்றி அவதூறு பேசுபவர்களுக்கு கொடுத்தால் அதை தாங்கமுடியாமல் தற்கொலை செய்து கொள்வார்கள்.

தான் யார், தான் எதற்காக வந்திருக...