இந்தியா, ஏப்ரல் 16 -- குட் பேட் அக்லி படத்தின் நன்றி தெரிவித்தல் நிகழ்ச்சியானது சென்னையில் நடைபெற்று வருகிறது. அந்த நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், ' நான் அஜித் சாரின் ரசிகனாக மாறாமல் இருந்திருந்தால் என்ன ஆகியிருப்பேன் என்று எனக்கு தெரியாது. ஆனால் ஒரு அஜித் ரசிகனாக இருந்தால் என்ன நடக்கும் என்பதை இந்த மொமண்ட் எனக்கு உணர்த்தி இருக்கிறது. என்றைக்குமே நான் அஜித் சாருக்கு நன்றி உள்ளவனாக இருப்பேன்.

மேலும் படிக்க | ' இரண்டாவது படத்துக்கே இப்படியா?.. அஜித் சாரோட பிரியாணிய மிஸ் பண்ணிட்டேன்ப்பா' -பிரியா வாரியர் பேச்சு!

என்னுடைய மனைவியிடம் சொன்னதை விட, அஜித் சாரிடம் தான் நான் அதிகமாக ஐ லவ் யூ சொல்லி இருக்கிறேன். அதற்காக நான் தற்போது ஐஸ்வர்யாவிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். நேர்கொண்ட பார்வை படப்பிடிப்பின் போது, போனி கபூர் சாரிட...