இந்தியா, பிப்ரவரி 24 -- தன் கணவருக்கு புளியோதரை என்றால் உயிர் என்றும்; பிள்ளைகள் மெட்ராஸ் வந்தால் தமிழில் தான் பேசுவாங்க என்றும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் பழைய பேட்டி ஒன்று வைரல் ஆகியுள்ளது.

இதுதொடர்பாக நடிகை ஸ்ரீதேவியிடம் நடிகை சுஹாசினி அவர் உயிருடன் இருக்கும்போது எடுத்த நேர்காணலை, ஜெயா டிவி 2025 ஜனவரி 17ல் மறு ஒளிபரப்பு செய்திருக்கிறது. அதன் தொகுப்பு:

அந்த சேஞ்ச் ஓவர் ஆட்டோமேட்டிக்காக நீங்கள் செய்து தான் ஆகணும். தமிழில் இருக்கும்போது தமிழுக்கு தகுந்த மாதிரி இருக்கணும். இதை நான் என்ஜாய் பண்றேன். என் பொண்ணுங்களும் எனக்கு ஆம்லேட் வேண்டாம்ன்னு சொல்லிக்கிட்டு இருந்தாங்க. நான் முதலில் இருந்து டயட்டில் தான் இருக்கேன்.

இப்பயும் அப்படி எல்லாம் இல்லைங்க. எங்களுக்கு கிளோஸ் ஃபிரெண்ட்ஸ் இருக்காங்க. எனக்கு அந்த கல்ச்சர் ஷாக் எல்லாம் இல்லை. நான் உண...