இந்தியா, ஏப்ரல் 10 -- ஆளுநர் பதவியின் அதிகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்த கேள்விக்கு "என் காது கேக்காது" என நாகலாந்து ஆளுநர் இல.கணேசன் பதிலளித்து உள்ளார்.

தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் தடுத்து நிறுத்தியதற்காக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த மனுவில் உச்ச நீதிமன்றம் கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி தீர்ப்பு வெளியானது. நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் ஆர். மகாதேவன் அமர்வு இந்த வழக்கை விசாரித்த நிலையில், நீதிபதி பர்திவாலா, தீர்ப்பு விபரங்களை வெளியிட்டனர்.

முழுமையான வீட்டோ அல்லது பாக்கெட் வீட்டோ என்ற கருத்து அரசியலமைப்புச் சட்டத்தில் இடம் பெறவில்லை. மசோதா ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்படும் போதெல்லாம், அவர் பிரிவு 200 இல் வழங்கப்பட்டுள்ள நடவடிக்கைகளில் ஒன்றைப் பின்பற்ற ...