இந்தியா, மார்ச் 22 -- பிதாமகன், உயிர், எவனோ ஒருவன், தனம், நான் அவனில்லை 2, மன்மதன் அம்பு போன்ற பல படங்களில் நடித்தவர் சங்கீதா கிரிஷ். இவர், சிறு வயது முதலே சினிமாவில் அறிமுகமானதால் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். அத்துடன், தன் வாழ்க்கையை நடிப்போடு சேர்த்து நடனத்திலும் பாடல் பாடுவதிலும் கவனம் செலுத்தினார்.

இவர், பாடகர் கிரிஷ்ஷை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வரும் நிலையில், சில ஆண்டுகளுக்கு முன் தன் சொந்த குடும்பத்தால் தான் எத்தனை வேதனைகளை தாங்கி உள்ளேன் என்பது குறித்து கலாட்டா மீடியா யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

மேலும் படிக்க: அறிவித்த உடனேயே விற்றுத் தீர்ந்த எம்புராண் பட டிக்கெட்ஸ்..

அந்தப் பேட்டியில் பேசிய சங்கீதா, "எதிர்பாராத விதமா எல்லா நடிகை, நடிகர்களுக்கும் ஒரு பெரிய பிரச்சனை இ...