சென்னை,சேலம், மார்ச் 12 -- எதிர்கட்சி தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் முதல்வர் ஸ்டாலினின் பேச்சுக்கு பதிலிடி தந்துள்ளார். அவர் பதிவு செய்துள்ள கண்டன அறிக்கை இதோ:

''டெல்லியில் தமிழ்நாட்டை அடகு வைத்தது யார் முதல்வரே? கல்லக்குடியில் ரயில் வராத தண்டவாளமாகப் பார்த்து தலை வைத்ததில் தொடங்கிய நாடக வரலாறு , இன்று வரை துரோக சரித்திரமாக நீண்டுகொண்டு இருக்கிறது. கட்சி தோற்றுவிக்கப்பட்டதன் அடிப்படை நோக்கத்தையே மறந்துவிட்டு இந்தி திணிப்பை முதன்முதலில் கொண்டு வந்த காங்கிரஸ் கட்சியோடு கைகோர்த்தது முதல், இன்றைக்கு கொல்லைப்புறமாக PM Shri திட்டத்தை முதலில் வரவேற்றுவிட்டு, தற்போது எதிர்ப்பு நாடகம் ஆடும் திமுகவிற்கு, அதிமுகப் பற்றி பேச எள்ளளவாவது அருகதை இருக்கிறதா?

மேலும் படிக்க | நான்குவழிச் சாலை அமைக்காமல...